பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர் - UPSC வினாத்தாளால் வெடித்த சர்ச்சை
UPSC வினாத்தாளில் பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதியை சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
UPSC தேர்வு
IAS, IPS உள்ளிட்ட இந்திய அரசின் உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் 69 மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு நடக்கிறது.
மண்ணடியில் உள்ள தேர்வு மையத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் ஹிந்தியில் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெரியார் பெயருக்கு பின்னால் சாதி
இந்நிலையில், வினாத்தாளில் பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர் சேர்த்து எழுதியிருப்பது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தது யார் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கான 4 ஆப்சன்களில், பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர்ராவ் ஜாதவ், தினகர்ராவ் ஜவால்கர் என கொடுக்கப்பட்டுளளது.
1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய பெரியார், 1929 ஆம் ஆண்டு தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜாதிப்பெயரை நீக்கினார்.
மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும் என சாதியை எதிர்த்த பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்தது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.