வெளியானது UPSC தேர்வு முடிவுகள் - முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்த பெண்கள்..
நேற்று வெளியான UPSC தேர்வு முடிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ் ) போன்ற பணிகளுக்கான தேர்வுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.இ) நடத்தி வருகிறது.

இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான இந்திய குடியியல் பணிகளுக்கான தேர்வின் (சிவில் சர்வீஸ்) முடிவுகள் நேற்று வெளியியிட்டது.
அதில் ஸ்ருதி ஷர்மா முதல் இடத்தையும், அங்கிதா அகர்வால் இரண்டாவது இடத்தையும் மற்றும் காமினி சிங்லா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வில் சுமார் 685 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 244 பேர் பொதுப் பிரிவையும், 73 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் பிரிவையும்,
203 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், 105 பேர் பட்டியல் இனத்தையும், 60 பேர் பட்டியல் பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள் என யு.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும். தேர்வு குறித்த முடிவுகளை www.upsc.gov.in. என்ற வலைதள பக்கத்தில் காணலாம்.
மேலும் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் இன்னும் 15 நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.