UPSC Exam Result 2023: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - முதல் இடங்களை பிடித்த பெண்கள்

Government Of India
By Thahir May 23, 2023 10:57 AM GMT
Report

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி நடத்திய தேர்வு இறுதி முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

வெளியானது யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்

கடந்த ஆண்டு ஜுன் மாதம் யுபிஎஸ்சி முதற்கட்ட தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜுன் 22ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

அதன் பிறகு செப்டம்பர் 15, 26 ஆகிய தேதிகளில் மெயன் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் டிசம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பிறகு நேர்முகத் தேர்வு மே 18-ம் தேதி நடைபெற்றது.

upsc-exam-result-2023-release

தற்போது இறுதி முடிவுகள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் 3 இடங்களை பெண்கள் பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு முதல் 4 இடங்களை பெண்களே பிடித்திருக்கின்றனர்.

முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள் 

விஷிதா கிஷோர் முதல் இடத்தையும், கரிமா லோகி 2வது இடத்தையும் உமா ஹரித்தா 3வது இடத்தையும் சுருதி மிஸ்ரா 4வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மயூத் சர்க்காரியா 5வது இடத்தையும் நிவாஸ் ஜெயின் 6-வது இடத்தையும், வசிம் 7வது இடத்தையும் அனில் அனில் பாய் யாதவ் 8-வது இடத்தையும், கோயல் என்பவர் 9-வது இடத்தையும், ராகுல் ஸ்ரீதர் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நேர்முகத்தேர்வுக்கு 933 பேர் அழைக்கப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, அவர்களுக்கான பணிகள் ஒதுக்கப்படும்.