நீண்ட நேர ஆலோசனை - ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி!

Festival Vinayagar Chaturthi
By Sumathi Aug 30, 2022 01:33 PM GMT
Report

உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈத்கா மைதானம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது.

நீண்ட நேர ஆலோசனை - ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி! | Uppalli Eidka Ground Vinayagar Chaturthi

இதற்கு முஸ்லிம் அமைப்பினர் ஈத்கா மைதானம் தங்களுக்குரியது என்று போராட்டம் நடத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.

விநாயர் சதுர்த்தி

அன்றுமுதல் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஈத்கா மைதானத்தில் விநாயர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளிக்கும்படி இந்து அமைப்பினர், தார்வார் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் தார்வார் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்து இருந்தனர். இந்நிலையில், மேயர் ஐரேஷ் அஞ்சடகேரி, அதிகாரிகளுடன் நடத்திய நீண்ட நேர ஆலோசனைக்குப் பின் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நடத்து அனுமதி அளித்து அறிவித்தார்.