தினசரி ரூ.1 லட்சம் கோடி UPI பரிவர்த்தனை.., இந்தியாவில் புதிய சாதனை
UPI transactions in a single month a new record- இந்தியாவில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
புதிய சாதனை
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் UPI மூலம் 2,547 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 23 சதவீதம் அதிகமாகும். இந்தப் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.31.53 லட்சம் கோடியாகும்.

இதன் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் தினசரி சராசரியாக ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பிலான UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
தினசரி சராசரிப் பரிவர்த்தனை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது இதுவே முதல் முறையாகும்.
சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை UPI பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்த வளர்ச்சி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.