UPI Rules: புதிய விதிகள் அறிமுகமானது

By Fathima Apr 11, 2026 06:51 AM GMT
Report

இன்றைய உலகில் பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் மோசடியும் அதிகரித்து வருகிறது.

இதை தடுப்பதற்காகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

10 ஆயிரத்துக்கும் மேல்

இதன்படி ஒரு வங்கி கணக்கில் இருந்து புதிய நபருக்கு அல்லது தெரியாத கணக்கிற்கு நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் அது உடனடியாக செல்லாது, ஒரு மணிநேரம் கழித்தே பணம் குறித்த கணக்கிற்கு செல்லும்.

UPI Rules: புதிய விதிகள் அறிமுகமானது | Upi Rules And Regulations Changes

ஒரு மணிநேரத்திற்குள், நீங்கள் தவறாகப் பணம் அனுப்பியுள்ளீர்களா அல்லது ஏமாற்றப்பட்டுள்ளீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அந்நேரத்தில் பரிவர்த்தனையை ரத்து செய்யக்கூட உங்களுக்கு அதிகாரம் உண்டு, இணையவழி குற்றங்களை இது தடுக்கும் என நம்பப்படுகிறது.

WhiteList

நம்பகமான நபர்கள் அல்லது கணக்குகளை  'whitelist' சேர்க்கும் விருப்பம் உங்களுக்கு உள்ளது. அத்தகைய கணக்குகளுக்குப் பணம் அனுப்பும்போது ஒரு மணி நேரத் தாமதம் இருக்காது.

இது உங்கள் நம்பகமான நபர்களுக்கு உடனடியாகப் பணம் அனுப்ப உங்களை அனுமதிக்கும். உங்கள் வசதிக்கேற்ப இதை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். 

விரைவில் இந்த விதி அமுலுக்கு வரும் என கூறப்படுகிறது.

UPI Rules: புதிய விதிகள் அறிமுகமானது | Upi Rules And Regulations Changes