UPI : ரூ.2000 க்கு மேல் பணம் அனுப்ப கட்டணம்? 2026-ல் அமல்!
யுபிஐ வழியாக ரூ.2000 க்கு மேல் அனுப்பப்படும் பணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
UPI
இந்த நிதியாண்டில், டிஜிட்டல் கட்டண ஊக்கத்தொகைகளுக்காக மத்திய அரசனது ரூ.427 கோடியை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில் டிஜிட்டல் கட்டண சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது

ரூ.2,000 க்கும் குறைவான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.5,000 - ரூ.6,000 கோடியை செலவிடுகிறது. இந்த இடத்தில் தான் ரூ.2000 க்கு கீழான யுபிஐ பேமண்ட்,ரூ.2000 க்கு மேலான யுபிஐ பேமண்ட் என்கிற பிரிவும்,
ரூ.2000 க்கு மேலான பணப்பரிவர்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அந்த நேரத்தில் நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆன பங்கஜ் சவுத்ரி, இதுபோன்ற முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் எடுக்கப்படுகின்றன என்றும்,
கட்டணம்?
அத்தகைய பரிந்துரை எதுவும் வரவில்லை என்றும் பதிலளித்திருந்தார். ஒவ்வொரு குறைந்த மதிப்புள்ள யுபிஐ வணிக பரிவர்த்தனையையும் செயலாக்க சுமார் ரூ.2 செலவாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் விவாதங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செலவுகள் தற்போது முழுமையாக பேமண்ட் செயல்முறைகளை இயக்கும் வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
தற்போது யுபிஐ அடைந்துள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டால், இந்த அமைப்பு இனி சாத்தியமில்லை என்று கட்டண ஆபரேட்டர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.