மும்பை அணியால் பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை... சோதனை மேல் சோதனை...

Chennai Super Kings Mumbai Indians TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 11, 2022 03:15 AM GMT
Report

கொல்கத்தா அணியுடனான போட்டியில் மும்பை அணி தோற்றதால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடரின் 56வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்று முன்தினம் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.மும்பை சார்பில் பும்ரா 5 விக்கெட், குமார் கார்த்திகேயா 2 விக்கெட், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய மும்பை அணியில் இஷான் கிஷன் மட்டும் பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் அந்த அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 11 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை அணி 2 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது.

வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி நடப்பு தொடரில் தனது 5வது வெற்றியை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 8வது இடத்திற்கும், சென்னை அணி 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சென்னை அணி அடுத்ததாக மும்பை அணியுடன் நாளை (மே12) ஆம் தேதி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.