தனுஷ் வீட்டுக்குள்ளே இப்படி ஒரு ஆளா? - இத்தனை நாளா இது தெரியாம போச்சே...

dhanush beast directorselvaragavan
By Petchi Avudaiappan Jan 30, 2022 06:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பீஸ்ட் படத்தில் இயக்குநர் செல்வராகவன் குறித்து வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் "பீஸ்ட்". இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தில் செல்வராகவன் வில்லன் இல்லை என்றும், காமெடி கலந்த அரசியல்வாதி கேரக்டரில் அவர் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. செல்வராகவன் கடைசியாக இயக்கிய படங்கள் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் அவர் சாணிக்காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 

தனுஷ் வீட்டுக்குள்ளே இப்படி ஒரு ஆளா? - இத்தனை நாளா இது தெரியாம போச்சே... | Update Of Director Selvaragavan Role In Beast

இதனைத் தொடர்ந்து  ருத்ரதாண்டவம் படத்தை இயக்கிய மோகன் ஜியின் புதிய திரைப்படத்தில் செல்வராகவன் நாயகனாக நடிக்கிறார்.மேலும் தனுஷின் நானே வருவேன் படத்தையும் அவர் இயக்கி வருகிறார். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தை விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சொல்லப்போனால் ஒரு காலத்தில் தனது தம்பியான நடிகர் தனுஷூக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர் இன்று அவருக்கு போட்டியாக நடிப்பில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.