நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக இறுதிப்பட்டியல் வெளியீடு

aiadmk localelection
By Irumporai Sep 21, 2021 01:56 PM GMT
Report

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் யாரை களமிறக்கலாம் என தமிழக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும்நிலையில், அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில் தற்போது இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 இடங்கள், விழுப்புரத்தில் 11 இடங்கள், திருப்பத்தூரில் 12 இடங்கள் என அதிமுக ஊராட்சி உறுப்பினர்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.