மருமகளுக்கு HIV ஊசி போட்ட மாமியார் - கொடூரமாக பழி வாங்கிய குடும்பம்

Uttar Pradesh Marriage HIV Symptoms
By Karthikraja Feb 16, 2025 06:30 AM GMT
Report

வரதட்சணை கொடுக்காததால் மருமகளுக்கு மாமியார் HIV தொற்று ஊசியை செலுத்தியுள்ளார்.

வரதட்சணை

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த சோனல் சைனி என்ற பெண்ணுக்கும் ஹரித்வாரை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும் கடந்த 15 பிப்ரவரி 2023 அன்று திருமணம் நடைபெற்றது.  

uttarpradesh marriage with dowry

இந்த திருமணத்தின்போது ரூ.15 லட்சம் பணமும், லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும் பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

HIV தொற்று

ஆனால் இதில் திருப்தியடையாத மாப்பிள்ளை வீட்டார், கூடுதலாக ரூ.25 லட்சம் பணமும், எஸ்யூவி காரும் கேட்டுள்ளனர். பெண் வீட்டார் தர மறுத்த நிலையில், பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதன் பின்னர் ஊர் பஞ்சாயத்தில் இந்த விசயம் பேசி தீர்க்கப்பட்டு, அந்த பெண்ணை மீண்டும் மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ஆனால் அந்த பெண்ணின் மாமியார் தொடர்ந்து மருமகளை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைபடுத்தியுள்ளார். இதில் வலுக்கட்டாயமாக மருமகளுக்கு HIV தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தியுள்ளார். 

hiv virus injection to daughter in law

ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் மீண்டும் தனது பெற்றோரிடம் சென்றுள்ளார். அந்த பெண்ணின் தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியானது. அந்த பெண்ணின் கணவருக்கு தொற்று எதுவும் இல்லை.

போலீஸ் அலட்சியம்

இது தொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, அவர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர். எனவே பெண்ணின் தந்தை சஹாரன்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், பெண்ணின் மாமியார், கணவர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து காங்கோ காவல்நிலையத்தில் பெண்ணின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி, கொடுமைப்படுத்தல் மற்றும் வரதட்சணை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.