குடிகார கணவர்களின் கொடுமை - தன்பாலின திருமணம் செய்த மனைவிகள்
குடிகார கணவர்களின் கொடுமை தாங்காத மனைவிகள் தங்களை தாங்களே திருமணம் செய்து கொண்டனர்.
கணவரின் குடி பழக்கம்
ஒரு சில குடும்பங்களில் குடி பழக்கம் உள்ள கணவர்கள் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியை தாக்கும் சம்பவம் நடைபெறும். பெரும்பாலான மனைவிகள் வேண்டா வெறுப்பாக அதை பொறுத்துக்கொள்ளவார்கள்.
இதே போல், உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மது பழக்கத்திற்கு அடிமையான கணவனால் பாதிக்கப்பட்ட மனைவிகள் இருவர் தன் பாலின திருமணம் செய்து கொண்டனர்.
மனைவிகள் திருமணம்
கஞ்சா(34), மற்றும் கவிதா(35) என்ற இரு பெண்களும் அவர்களது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் வெவ்வேறு காலகட்டங்களில் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். இதன் பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் பேச தொடங்கியுள்ளனர்.
இது இருவருக்குமிடையே காதலாக மாறி, கடந்த 23.01.2025 அன்று மாலை தியோரியாவில் உள்ள சோட்டி காசி என்ற சிவன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் குறித்து பேசிய அவர்கள், "எங்கள் கணவர்களின் குடிப்பழக்கம் மற்றும் தவறான நடத்தையால் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். இது அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க எங்களைத் தள்ளியது" என கூறினர்.