ராமர் கோவில் திறப்பு விழா அன்று அறுவை சிகிச்சை செய்யனும் - விடாப்பிடியாக கர்ப்பிணிகள்!

Pregnancy Uttar Pradesh
By Sumathi Jan 08, 2024 10:16 AM GMT
Report

ராமர் கோயில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற கர்ப்பிணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமர் கோயில் திறப்பு

உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

ராமர் கோவில் திறப்பு விழா அன்று அறுவை சிகிச்சை செய்யனும் - விடாப்பிடியாக கர்ப்பிணிகள்! | Up Wish Birth Child Ayodya Ram Temple Inauguration

தொடர்ந்து, ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராம் மந்திர் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு, இந்தியா முழுவதும் சாவடி மட்டத்தில் ஒளிபரப்பப்படவுள்ளது.

Fact Check: அயோத்தியில் படையெடுத்த ஜடாயு பறவைகள்? தீயாய் பரவும் வீடியோ!

Fact Check: அயோத்தியில் படையெடுத்த ஜடாயு பறவைகள்? தீயாய் பரவும் வீடியோ!

கர்ப்பிணிகள் ஆர்வம்

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு 8,000 பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொதுமக்கள் அன்று கோவிலுக்கு வர வேண்டாம். கோவில் வளாகம் என்பது இன்னும் தயாராகவில்லை. அதோடு கோவில் பணிகள் முழுவதுமாக முடியவில்லை. இதனால் பக்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களில் கொண்டாட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ayodhya-ram-temple

இந்நிலையில், ஜனவரி 2ம் வாரத்திற்கு பின் பிரசவ தேதி உள்ள 35 கர்ப்பிணிகள், ராமர் கோயில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ஜனவரி 22ம் தேதி தங்களுக்கு பிரசவமாக வேண்டும் என அறுவை சிகிச்சைக்காக உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் விண்ணப்பங்கள் குவியத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.