முதலிரவில் மனைவி கேட்ட விஷயம் - அதிர்ச்சியில் காவல்நிலையத்திற்கு சென்ற கணவர்
முதலிரவில் மணப்பெண் கேட்ட விஷயத்தால் கணவரின் குடும்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
முதலிரவு
உத்தர பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.
திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் நல்லபடியாக முடிந்ததையடுத்து, முதலிரவு அறையில் உற்சாகத்துடன் கணவர் இருந்த போது மனைவி கேட்ட விஷயங்கள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கஞ்சா கேட்ட பெண்
முதலில் தனக்கு பீர் வேண்டும் என மனைவி கேட்ட உடன், அதை வாங்கி தர கணவர் ஒத்துக்கொண்ட நிலையில், தொடர்ந்து கஞ்சா மற்றும் ஆட்டு இறைச்சி வேண்டுமென கேட்டது கணவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனை அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்களும் அதிர்ந்து போயுள்ளனர்.
இது குறித்து பெண் வீட்டாரிடம் கேட்ட போது இரு குடும்பத்தினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பீர், கஞ்சா இறைச்சி சாப்பிடும் பெண்ணுடன் வாழ முடியாது என கணவரின் குடும்பத்தினர் சஹாரன்பூர் டிபி நகர் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
விளையாட்டிற்கு கேட்டதை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர். மேலும், என் மனைவி பெண் இல்லை மூன்றாம் பாலினத்தவர் என்று கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இரு வீட்டினரும் அதிகாரபூர்வமாக புகார் அளிக்க விரும்பாததால், பிரச்சினையை வீட்டில் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.