தமிழக போலீசார் மீது தாக்குதல் - உத்திரபிரதேச சுற்றுலா பயணிகள் அட்டூழியம்
சோதனை சாவடியில் காவல்துறையினரை வட மாநில பயணிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை சாவடி
தமிழக கர்நாடக எல்லையான காரைக்காட்டில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. தினமும் இந்த சோதனை சாவடி வழியாக கர்நாடக, தமிழகத்தை சேர்ந்த ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. பிற மாநில வாகனங்களும் செல்வது உண்டு.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிரேக்யராஜ் மாவட்டத்தை சேர்ந்த 43 பேர் ஆன்மீக சுற்றுலாவிற்கு தென் மாநிலங்களுக்கு வந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச பயணிகள்
தமிழகத்தில் பல்வேறு மதுரை, கன்னியாகுமரி என பல்வேறு சுற்றுலாதளங்களை பார்வையிட்ட அவர்கள், நேற்று(27.12.2024) காலை கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு செல்ல, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காரைக்காடு சோதனை சாவடி வழியாக சென்றனர்.
அங்கு வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்த தமிழக காவல்துறையினர், பேருந்து ஓட்டுனரிடம் வாகனத்திற்கான பெர்மிட்டை கேட்டுள்ளனர். அது இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கூறியுள்ளனர்.
போலீஸ் மீது தாக்குதல்
காவல்துறையினர் அதற்கு மறுத்த நிலையில், சுற்றுலா பயணிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், சுற்றுலா பயணிகள் கடப்பாரையைக் கொண்டுகாவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் தலைமை காவலர்கள் சுகனேஸ்வரன், செந்தில்குமார் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு ஆதரவாக சுற்றுலா பயணிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 4 சுற்றுலா பயணிகள் காயமடைந்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த குளத்தூர் காவல்துறையினர், விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா கைகளில் எடுத்துள்ள முக்கிய ஆயுதம்? கொம்பேறிமூக்கனாக மாற இருக்கும் இந்திய உளவுப் படை!! IBC Tamil
