வகுப்பறையிலே ஆபாச படம் பார்த்த ஆசிரியர் - சிரித்த மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்
வகுப்பறையில் வைத்தே ஆசிரியர் ஆபாச படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச படம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள தனியார் பள்ளியில் குல்தீப் யாதவ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று வகுப்பறையில் வைத்தே தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்து கொண்டு இருந்துள்ளார்.
தாக்குதல்
அவர் ஆபாச படம் பார்ப்பதை கண்ட 8 வயது மாணவன் ஒருவன் தன் நண்பர்களுடன் அதை பற்றி விவாதித்து சிரித்துள்ளான்.
இதை கண்டு ஆத்திரமடைந்த ஆசிரியர், அந்த மாணவனின் தலைமுடியை பிடித்து சுவற்றில் மோத வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் கைத்தடியாலும் தாக்கியுள்ளார்.
இதில் மாணவனின் காது மற்றும் தலையில் பலத்த காயமடைந்துள்ளதாக மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.