கண்ணாலே காதல் - தந்தை கண்டித்ததால் ஆத்திரம்! அடுத்து நடந்த கொடுமை!
உத்திர பிரதேசத்தில், காதலித்த மகளை தந்தை கண்டித்ததால் ஆத்திரத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள புடானில் வசிக்கும் 21 வயது பெண் ஒருவர் ,தன்னுடைய பக்கத்து வீட்டு வாலிபரை காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி கொண்டும், சமூக ஊடகம் மூலமாகவும் பேசி கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும் அவ்வபோது ஜன்னல் வழியாக கண்ணாலே பேசி வந்துள்ளனர். ஒரு நாள் இதை கவனித்த பெண்ணின் தந்தை, மகளை கண்டித்துள்ளார்.
மேலும் அவரது காதலனின் உறவினர், குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அனைவரின் முன்னிலையிலும் மகளை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள், விட்டிற்குள் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகள் இறந்தும் கூட திருந்தாத தந்தை, தன் மகளை அவரது காதலன் பாலியன் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதை பொய் என்று கண்டுபிடித்த போலீசார், தந்தையை எச்சரித்துவிட்டு சடலத்தை மிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.