நாப்கின் கேட்ட பள்ளி மாணவி.. வகுப்பறையில் ஆசிரியை செய்த கொடூரம் - அதிர்ச்சி சம்பவம்!
நாப்கின் கேட்ட பள்ளி மாணவியை ஆசிரியர் ஒருவர் வகுப்புக்கு வெளியே நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவி
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் மேல்நிலை பெண்கள் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தேர்வு எழுதச் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மாணவிக்கு மாதவிடாய் சுழற்சி தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பள்ளி ஆசிரியரிடம் சானிட்டரி நாப்கின் கேட்டுள்ளார். ஆனால் பள்ளி ஆசிரியர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நாப்கின் கொடுக்காமல் அவரை வகுப்பறைக்கு வெளியே நிற்கும்படி கூறியுள்ளார்.
மாதவிடாய் சுழற்சி
இதனால் அந்த மாணவி சுமார் ஒரு மணிநேரம் வகுப்பறை வெளியே நின்றுள்ளார்.இதில் அப்பெண்ணிற்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற மாணவி தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மாவட்ட நீதிபதி, மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர்,மாநில மகளிர் ஆணையம் மற்றும் பெண்கள் நலத்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பள்ளி ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.