இனி RTO அலுவலகத்திற்கு செல்லவே வேண்டாம்; WhatsApp போதும் - முழு விவரம்

WhatsApp Uttar Pradesh
By Sumathi May 03, 2025 09:00 AM GMT
Report

போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளை வாட்ஸ்அப்பில் பெறலாம்.

RTO சேவை

உத்தரப் பிரதேச அரசு வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளை வாட்ஸ்அப்பில் வழங்குகிறது.

இனி RTO அலுவலகத்திற்கு செல்லவே வேண்டாம்; WhatsApp போதும் - முழு விவரம் | Up Rto Services On Whatsapp For License

அதன்படி, வாகனம், ஓட்டுநர் உரிமம், செலான் மற்றும் பல முக்கிய தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பெறலாம். "Hi" என்று அனுப்புவதன் மூலம் இந்த அனைத்து விவரங்களையும் ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவை 24x7 முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை இருக்கு; அவர் ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை இருக்கு; அவர் ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த்

 

விவரம் இதோ..

எனவே, உரிமம், வாகனப் பதிவு அல்லது செலான் தொடர்பான தகவல்களுக்கு இனி RTO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. ஒரே செய்தியில் அனைத்து சேவைகளையும் பெறலாம்.

இனி RTO அலுவலகத்திற்கு செல்லவே வேண்டாம்; WhatsApp போதும் - முழு விவரம் | Up Rto Services On Whatsapp For License

இந்த வசதியைப் பயன்படுத்த, உங்கள் மொபைலில் 8005441222 என்ற எண்ணைச் சேமித்து, வாட்ஸ்அப்பில் "Hi" என்று அனுப் வேண்டும். அரசு சேவைகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும், பொதுமக்களின் மொபைலுக்கும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.