விவசாயிகளை ஏற்றிக் கொன்றது திட்டமிட்ட படுகொலையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

UttarPradesh FarmersProtest LakhimpurKheri
By Irumporai Oct 08, 2021 05:56 AM GMT
Report

உத்தர பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்திய நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.இந்த சம்பவத்தில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்ற குரல் நாடுமுழுவதும் ஒலித்து வருகிறது.

இந்த  நிலையில் , உ.பி போலிஸார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய லவ் குஷ், ஆஷிஸ் பாண்டே என்ற இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, விவசாயிகள் மீது கார் ஏறிச் செல்லும் வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ராமு காஷ்யப்பை சுட்டுக் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் மீது கார் ஏறிய வாகனத்தை போலிஸார் சோதனை செய்தனர்.

இதில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்துள்ளது. இதை போலிஸார் பறிமுதல் செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா தப்பித்துச் செல்வதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் மீது கார் ஏற்றிய வாகனத்தில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.