குடிக்க தண்ணீர் கேட்ட நபர் - ஆசிட் குடிக்க வைத்த போலீசார்
குடிக்க தண்ணீர் கேட்ட நபரை காவல்துறையினர் ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
மாணவர்கள் மோதல்
உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர சிங். அக்டோபர் 14 ஆம் தேதி இரவு, சைட் நாக்லி காவல்நிலையத்திற்கு வெளியே மாணவர்கள் இரண்டு குழுவாக சண்டையிட்டுள்ளனர்.
இதனை கண்ட தர்மேந்திர சிங் என்பவர், நேரடியாக தலையிட்டு சண்டையிட்டவர்களை தடுக்க முயன்றுள்ளார்.
ஆசிட்
இதனை பார்த்த காவல்துறையினர் தர்மேந்திரா உட்பட அங்கிருந்த அனைவரையும் கைது செய்து லாக்கப்பில் வைத்துள்ளனர். தான் சண்டையை விலக்கவே வந்தேன் என தர்மேந்திரா கூறியும் காவல்துறையினரிடம் காவல்துறையினர் அவர் பேச்சை கேட்க மறுத்துவிட்டனர்.
மேலும் லாக்கப்பில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின் தாகத்தில் இருந்த தர்மேந்திர சிங், காவல்துறையினரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த காவல்துறையினர் அவரை வற்புறுத்தி ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
கவலைக்கிடம்
உடனே மயக்கமடைந்த தர்மேந்திர சிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடலில் அதிகப்படியான சேதம் ஏற்பட்டுள்ளதால் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தர்மேந்திராவின் இந்த நிலைக்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தர்மேந்திராவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.