முதியவரின் தலையை துண்டாக வெட்டி சாலையில் எடுத்து சென்ற வாலிபர் – அலறி அடித்து ஓடிய மக்கள்! அதிர்ச்சி வீடியோ!
உத்தரபிரதேசம் காஜியாபாத் சூரா கிராமத்தை சேர்ந்த மாதவ் கோண்ட், தனது பக்கத்து வீட்டுக்காரரான 65 வயது கரண் சிங்கை கோடாறியால் வெட்டி கொலை செய்து விட்டு அவரது தலையை கையில் எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து சென்றுள்ளார்.
இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் சிலர், இதனை தாங்க இயலாமல் மயக்கம் போட்டு சாலையிலேயே விழுந்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதை தொடர்ந்து போலீசார், மாதவ் கோண்ட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட முதியவர் மாதவ் நிலத்தில் பயிர்கள் அழிய வேண்டும் என சூனியம் வைத்திருப்பதாகவும், அவ்வபோது மாடுகளை அவிழ்த்துவிட்டு பயிர்களை மேயவிடுவதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் மாதவ், அந்த முதியவரை கொடூரமாக கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், அந்த ஆத்திரம் அடங்காததால், அவரது தலையை எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றேன் எனவும் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாதவ்வை கைது செய்து சிறையில் அடைத்தனர்.