பாலியல் தொழிலில் 10 வயது சிறுமி - ஆண் நண்பருக்கு தாயே உடந்தையாக இருந்த கொடூரம்!
பெற்ற தாயே குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபட செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்
உத்தர பிரதேசம், காசியாபாத் பகுதியில் இரண்டு குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் வசித்து வந்தனர். இதில், தந்தை இறந்த நிலையில் குழந்தைகள் இருவரும் தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வந்தனர்.
தொடர்ந்து, சமீப காலமாக குழந்தைகள் அவர்களது தாய் மற்றும் அவரது ஆண் நண்பருடன் இணைந்து வசித்து வந்தனர். இதற்கிடையில், தாய் விபச்சார தொழில் செய்து வந்த நிலையில் அவருடைய 10 வயது மகளையும் அதில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளார்.
தாய் உடந்தை
மேலும், அந்த சிறுமி தாயின் ஆண் நண்பர் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சகோதரனும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் தொல்லையை தாங்கமுடியாத சிறுமி வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
அவரை மீட்ட டெல்லி காவல்துறை குழந்தைகள் நல ஆணையத்தின் பராமரிப்பில் அனுப்பி வைத்தனர். அங்கு தான் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் தன் தாயே அதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தாயையும் அவரது ஆண் நண்பரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.