குரங்குகளை விரட்ட மெட்ரோ நிர்வாகம் செய்த அதிரடி - என்ன தெரியுமா?
உத்தர பிரதேசத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் குரங்குகளை விரட்ட புது யுக்தி கையாளப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பாட்ஷா நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை திடீர் என்று மிரட்டும் வகையில் லாங்கர் இன குரங்குகள் வருவது வழக்கம்.
அவை ரெயில் நிலையத்தின் நடைமேடையில் சுற்றி திரிவதுண்டு. இதனால் குழந்தைகள் அவற்றை கண்டு ஆச்சரிமடைந்தபோதிலும், ஒரு சிலர் அச்சமடைந்து உள்ளனர்.
குரங்குகளால் தங்களுக்கும், தங்களது உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்காக மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

முதலில் லாங்கர் ஆத்திரமடைந்த குரங்குகளின் குரல்களை ஒலிக்க செய்துள்ளனர். இதில் ஓரளவு பலன் கிடைத்துள்ளது. ஆனால், நீண்டகால பலனில்லை.
இதனால், ரயில்வே நிர்வாகம் குரங்குகளின் கட்-அவுட்டுகளை வைக்க முடிவு செய்தது. இந்த கட்-அவுட்டுகளுடன் சேர்த்து குரல்கள் ஒலிக்கும்போது, அதில் பலனை காண முடிந்துள்ளது. கட்-அவுட்டுகளின் இடங்களையும் அவ்வப்போது மாற்றி, மாற்றி வைத்து வருகின்றனர்.