பெண்ணுடன் தகாத உறவு - இளைஞரின் ஆணுறுப்பை சிதைத்து கொலை

Uttar Pradesh Murder
By Karthikraja Jan 25, 2025 09:30 PM GMT
Report

தகாத உறவின் காரணமாக இளைஞர் ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் மாயம்

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸம்மில் (28), மொபைல் டவர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 

bareilly news

இந்நிலையில் கடந்த 21.01.2025 அன்று காலை வீட்டை விட்டு சென்ற அவர், மாலை வரை வீட்டிற்கு திரும்பி வராத நிலையில், அவரது தந்தை ஷம்சுதீன், முஸம்மிலின் செல்போனுக்கு அழைத்துள்ளார்.

கொலை

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், அதிர்ச்சியடைந்த அவர், தனது மகனை காணவில்லை என பிசல்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே பர்காபூர் பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு இளைஞரின் உடல் உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலடிப்படையில், அங்கு சென்ற காவல்துறையினர், அது முஸாம்மில் உடல் என்பதை உறுதி செய்தனர். 

bareilly youth body

இதனையடுத்து, உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், முஸம்மின் கழுத்தை அறுத்தும், ஆணுறுப்பை சிதைக்கப்பட்டும் கொல்லப்பட்டது தெரியவந்தது.

தகாத உறவு

முஸம்மிலுக்கு சில நபர்களுடன் தகராறு இருந்ததாகவும், அந்த நபர்கள்தான் அவருடைய கொலைக்கு காரணம் என முஸம்மிலின் தந்தை ஷம்சுதீன் காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதனடிப்படையில், பிலிபிட்டில் உள்ள ரிச்சவுலா கிராமத்தைச் சேர்ந்த அர்ஹான் மற்றும் அவரது நண்பர் குட்டு ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அர்ஹானின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன், முஸாம்மிலுக்கு தகாத உறவு வைத்திருந்ததால் இவர்களிடையே பிரச்சினை இருந்துள்ளது. இதனால் முஸம்மிலை கொலை செய்து அவரை உடலை காரில் கொண்டு சென்று வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

bareilly arrest

இதனையடுத்து, இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.