கனவில் மனைவி சொன்ன விஷயம் - 36 வருடமாக பெண் வேடத்தில் வாழும் நபர்
36 வருடமாக பெண் வேடத்தில் வாழ்ந்து வருவதற்கு ஒரு அதிர்ச்சி காரணத்தை தெரிவித்துள்ளார்.
2வது திருமணம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்தா ஹரன் சவுகான்(66). இவருக்கு 14 வயது இருக்கும் போதே அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
அவரின் மனைவி இறந்த சில ஆண்டுகளுக்கு பிறகு, 21 வயதில் மேற்கு வங்காளத்தில் உள்ள தினாஜ்பூருக்கு சென்றவர் அங்கு ரேசன் வியாபாரியுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது மகளை சிந்தாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
அடுத்தடுத்த உயிரிழப்பு
சிந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்து கேள்விப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதன் பிறகு சிந்தா தனது இரண்டாவது மனைவியிடம் சொல்லாமல் கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.
பல நாட்கள் ஆகியும் சிந்தா திரும்பி வராததால், அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். ஒரு வருடம் கழித்து சிந்தா மீண்டும் மேற்கு வங்கத்திற்கு சென்ற போது, இரண்டாவது மனைவி தன்னால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு, தனது கிராமத்திற்குத் திரும்பிய சிந்தா அங்கு இன்னொரு பெண்ணை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு சிந்தாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. மேலும், அவரது தந்தை, சகோதரர்கள், மூத்த சகோதரனின் மனைவி, அவர்களின் 2 மகன்கள், 3 மகள்கள் மற்றும் மூன்றாவது மனைவிக்குப் பிறந்த 4 மகன்கள் என குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டுள்ளது.
கனவில் நிபந்தனை
தனது 2வது மனைவி அடிக்கடி கனவில் வந்து என்னை ஏமாற்றி விட்டாய் என அழுகுவதாகவும், அவரிடம் எனது குடும்ப உறுப்பினர்களை காப்பாற்று என கெஞ்சியதாகவும் சிந்தா தெரிவித்துள்ளார். மேலும், உனது குடும்ப உறுப்பினர்கள் காப்பாற்ற வேண்டுமென்றால் நீ பெண் போல் அலங்காரம் செய்து வாழ வேண்டும். அப்படி செய்தால் உன் குடும்ப உறுப்பினர்களை விட்டு விடுவதாக 2வது மனைவி தெரிவித்தாராம்.
இதனாலே கடந்த 36 ஆண்டுகளாக சேலை கட்டி, ஆபரணங்கள் அணிந்து சிந்தா பெண் வேடத்தில் வாழ்ந்து வருகிறாராம். இதன் பிறகு அவரது குடும்பத்தில் இறப்பு ஏற்படவில்லையாம். முன்னதாக அவரது 9 மகன்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நபர் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் சிலர் கருதுகின்றனர்.