சூறாவளியில் மலர்ந்த காதல்: 8 வருடங்களுக்கு பின் கரம்பிடித்த கடல் கடந்த காதலன்!
பேஸ்புக்கில் பழகி 8 வருடங்கள் காதலித்து ஜோடி திருமணம் செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் பழக்கம்
உத்தரப்பிரதேசம், நாராயண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்வார். இவரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த மிப்தாகுல் என்பவருக்கும் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2017 இல் தென்னிந்தியாவை ஒரு சூறாவளி தாக்கியபோது, இருவரும் நலம் விசாரித்து கொண்டனர்.

அதன்பின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு கடல் கடந்து மிப்தாகுலை சந்திக்க சன்வார் முதன் முறையாக விமானத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்றார், அதன் பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
சூறாவளியில் காதல்
மிப்தாகுலின் தந்தை இறந்ததால், அவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் மேடானில் வசித்து வந்தார். மிப்தாகுல் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் தங்களது பெற்றோர்களிடம் காதலைக் கூறி சம்மதமும் வாங்கினர்.
அதனையடுத்து 2019ல் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் திருமணத்திற்கு தாமதமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இருவரும் இந்தோனேசியாவில் திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை டியோரியாவில் ஏற்பாடு செய்தனர்.
இயற்கை சீற்றங்களின்போது, இருவருக்கிடையேயான நட்பு நெருக்கமானது எனவும், பல போராட்டங்களுக்கு பிறகு இருவரும் இணைந்தாக மணமக்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.