இரவில் பாம்பாக மாறும் மனைவி - கலெக்டரிம் அலறிய கணவன்!
மனைவி இரவில் பாம்பாக மாறி துரத்துவதாக கணவன் புகாரளித்துள்ளார்.
பாம்பாக மனைவி
உத்தரப் பிரதேசம், சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மெராஜ். இவர் தனது மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க துரத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துபூர்வமாக புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து பொது குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசிய மெராஜ், தனது மனைவி பலமுறை தன்னை கொல்ல முயன்றதாகவும், இது மனதளவில் தன்னை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
கணவன் புகார்
மேலும், அவர் ஏற்கெனவே ஒருமுறை தன்னை கடித்ததாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக சார்பாட்சியர் மற்றும் காவல்துறைக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்கை 'உளவியல் துன்புறுத்தல்' தொடர்பான சாத்தியமான வழக்காக கருதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.