சிறுமியை 7 ஆண்டுகளாக ‘டிஜிட்டல் பலாத்காரம்’ செய்த காம கொடூரன் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!

Sexual harassment Uttar Pradesh
By Swetha Subash May 17, 2022 07:24 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

80 வயதான ஓவிய கலைஞர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் ஏழு ஆண்டுகளாக பல்வேறு அநாகரீக செயல்களில் ஈடுபட்டு டார்ச்சர் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 80 வயது ஓவிய கலைஞரான மார்ஸ் ரைடர் என்ற நபரால் 17 வயது சிறுமி கடந்த ஏழு ஆண்டுகளாக சித்திரவதை அனுபவித்து வந்துள்ளார்.

சிறுமியை 7 ஆண்டுகளாக ‘டிஜிட்டல் பலாத்காரம்’ செய்த காம கொடூரன் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்! | Up Man Arrested Over Digital Rape Accusation

இதனை தொடர்ந்து அந்த சிறுமி நொய்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமியின் புகாரை பெற்றுக்கொண்ட நொய்டா போலீசார், இந்திய தண்டனைச்சட்டம் 376, கற்பழிப்பு, 323, தானாக முன்வந்து காயப்படுத்துதல் மற்றும் 506 குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் அவரது கொடூரமான செயலை எதிர்த்ததற்காக அவரை அடித்துள்ளார்.

2013 வரை 'டிஜிட்டல் பலாத்காரம்' பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டது . 2012-ம் ஆண்டு நடந்த கொடூரமான நிர்பயா கும்பல் பலாத்கார சம்பவத்திற்குப் பிறகுதான், புதிய பலாத்காரச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

சிறுமியை 7 ஆண்டுகளாக ‘டிஜிட்டல் பலாத்காரம்’ செய்த காம கொடூரன் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்! | Up Man Arrested Over Digital Rape Accusation

'டிஜிட்டல் கற்பழிப்பு' என்பது இணையதளத்தில் ஒருவரின் அடையாளத்தை சிதைப்பதுடன் தொடர்புடையது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. 'டிஜிட்டல் கற்பழிப்பு'-இன் அர்த்தம் மற்றவரின் அந்தரங்க உறுப்புகளுக்குள் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக கைவிரல்கள் அல்லது கால்விரல்களை நுழைப்பதாகும்.

ஊடக அறிக்கையின்படி, இத்தகைய குற்றங்கள் 70 சதவீத வழக்குகள் நெருங்கிய மற்றும் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படுகின்றன. இருப்பினும், மிகக் குறைவான குற்றங்களே பதிவு செய்யப்படுகின்றன.

இதற்கு முதன்மை காரணம் பலாத்காரச் சட்டங்கள் மற்றும் ‘டிஜிட்டல் ரேப்’ என்ற சொல்லைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை என்பது தான்.

சட்டத்தின்படி, இந்த குற்றத்தில் ஈடுப்படும் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த தண்டனை 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் அல்லது ஆயுள் தண்டனையும் கூட இருக்கலாம்.