2 ஆண்டுகள் சிறை.. பாலியல் இன்பம் பறிபோனது - 10ஆயிரம் கோடி இழப்பீடு கேட்கும் நபர்!
சிறையில் இருந்ததால் பல கொடுமைகளை அனுபவித்த நிலையில் நப்ர் ஒருவர் அரசிடம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாலியல் பலாத்காரம்
மத்திய பிரதேசம், ரத்லமில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால்(35).இவர் தன்னுடைய நண்பர் பர்னு என்பவருடன் சேர்ந்து, ஒரு இளம்பெண்ணை 6 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டு 666 நாட்களுக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கந்து தற்போது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
சிறை
அந்த மனுவில், ”ஜெயிலில் நான் சந்தித்த கஷ்டங்களை விவரிக்க முடியாது. என் குடும்பத்தினரால், எனக்கு உள்ளாடைகூட வாங்கி தர முடியவில்லை. அந்த அளவுக்கு பொருளாதார சூழ்நிலை வாட்டியது.
ஜெயிலுக்குள் நிறைய வெயில் அடித்தது. குளிர் அடித்தது. அதற்கேற்ற உடைகள் இல்லாமல் கஷ்டமான வானிலையை அனுபவித்தேன். சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும்கூட, தோல் தொடர்பான நோய்கள் வந்துவிட்டது.
இழப்பீடு
நிரந்தர தலைவலியும் வந்துவிட்டது.. இன்னும் பல நோய்களை சந்தித்தேன். 6 பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிப்பவன் நான் மட்டும்தான். என் மனநிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். போலி மற்றும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகள் என் மீது திணிக்கப்பட்டன.
மேலும், 666 நாட்கள் சிறை சென்றதால் மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்ததற்காக மத்திய பிரதேச அரசு எனக்கு 10 ஆயிரம் கோடியே 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.