இடமாற்றம் வேண்டுமா உன் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்பு : உயர் அதிகாரியால் தற்கொலை செய்துகொண்ட மின்ஊழியர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின் துறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு இடமாற்றம் வேண்டும்மென்றால் அவரது மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள் என்று கேட்ட அதிகாரியால் மின் வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலத்தில் மின் துறையில் பணிபுரியும் கோகுல் என்பவர் தனது உயர் அதிகாரி நாகேந்திர ஷர்மாவிடம் இடமாற்றம் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதற்கு நாகேந்திரா கோகுலிடம் ரூ 1 லட்சம் தருமாறு கூறியுள்ளார், ஒரு வேளை முடியவில்லையென்றால் உனது மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து போன கோகுல் அந்த உயர் அதிகாரி நாகேந்திரா வீட்டின் முன்பு தீக்குளித்துள்ளார், இதில் பலத்த காயமடைந்த கோகுல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமகா உயிரிழந்தார்.
இந்த நிலையில் இறப்பதற்கு முன்பாக தனது உயர் அதிகாரி குறித்து கோகுல் வெளியிட்ட வாக்கு மூலம் இணையத்தில் வைரலான நிலையில் ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதி மன்றம் 3 பேர் கொண்ட குழுவால் விசாரணை அமைத்து வழக்கு தொடர்பான அறிக்கையினை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.