ட்விட்டர் மீது எப் ஐ ஆர் போட்ட உ.பி அரசு .. காரணம் என்ன?

india twitter fir itrules
By Irumporai Jun 16, 2021 11:21 AM GMT
Report

ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த சட்டபாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில், தற்போது முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.

ஐடி விதிகளை மீறியதா ட்விட்டர்:

இந்தியா அரசு கொண்டு வந்துள்ள புதிய ஐடி விதிகளின் படி ட்விட்டர் நிறுவனம் இந்திய அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்அவர் இந்தியராக இருக்கவேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் புகார்கள் மீது இந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் ஐடி விதிகளில் உள்ள முக்கியமான கருத்து இந்த விதியை ட்விட்டர் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை .

அதாவது {Chief Compliance Officer} எனப்படும் தனிக்கை செய்யும்இடைக்கால நிர்வாகி ஒருவரை ட்விட்டர் நிறுவனம் நியமித்துள்ளது.

இந்த நிலையில் ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. இதனால் ட்விட்டரில் வலம் வரும் கருத்துகளுக்கு ட்விட்டர் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

சர்ச்சையான வீடியோ:

உத்தரப்பிரதேச மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய முதியவர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என கூறும்படி வலியுறுத்தி ஒரு கும்பல் அடித்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உபி அரசு கேட்டுக் கொண்டது.

ட்விட்டர் மீது எப் ஐ ஆர்  போட்ட உ.பி அரசு .. காரணம் என்ன? | Up Government Files Fir On Twitter

ஆனால் அந்த வீடியோவினை ட்விட்டர்  நீக்கவில்லை இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஏன் நீக்கவில்லை என கூறி டுவிட்டர் நிறுவனம் மீது உத்தரப்பிரதேச மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே புதிய சமூக வலைதள விதிகளை எதிர்த்து டுவிட்டர் குரல் கொடுத்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மீது புதிதாக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.