காதலுக்கு மறுப்பு: ஆத்திரத்தில் சிறுமியை நடுரோட்டில் சுட்டுக்கொன்ற இளைஞர்!
காதலை ஏற்க மறுத்த சிறுமியை இளைஞர் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு மறுப்பு
உத்தரப் பிரதேசம், சுர்வாயா என்ற பகுதியை சேர்ந்தவர் அனுராதா பின்த்(15). இவர் தனது உறவினர் நிஷாவுடன் கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் விஸ்வகர்மா என்ற 22 வயது இளைஞர் இரு சக்கர வாகனத்தில் வந்து சிறுமியை வழிமறித்துள்ளார்.

பின்னர் தன்னிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து சிறுமியின் தலையில் சுட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதை பார்த்து சிறுமியின் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சிறுமி கொலை
சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவி அனுராதாவை அரவிந்த் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் மாணவி, அரவிந்தின் காதலுக்கு தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், அரவிந்த் மற்றும் அவருக்கு துப்பாக்கி ஏற்பாடு செய்து கொடுத்த கூட்டாளி சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.