14 வயது சிறுமியை கடத்தி சென்று அடைத்து வைத்து கொடூரம் - சிறுமியை தேடும் பணி தீவிரம்!
உத்திரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை கடத்திய வழக்கில் கான்ஸ்டபிள் மற்றும் அவனது மகனை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் சம்பல் கோட்வாலி காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் கான்ஸிடபிளின் மகன் சமீர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இதனால் சமீர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சிறுமியை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மகள் யாரையும் காதலிக்கவில்லை என்றும் மகளை கடத்தி சென்று அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் சமீர் குடும்பத்தார் மீது சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து கான்ஸிடபிள், அவரது மனைவி மற்றும் மகன் சமீரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.