தொடர்ந்து பெண் குழந்தை பெற்றதால் ஆத்திரம் - மனைவி மீது வெந்நீர் ஊற்றிய கொடூரர்!
உத்திர பிரதேசத்தில், ஒரு மனைவி தொடர்ந்து பெண் குழந்தைகளே பெற்றதால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண்ணின் உடல் முழுவதும் வெந்நீரை கொட்டி கொடூரமாக கொடுமைப்படுத்தினார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சத்யபால் என்ற நபர் தன் மனைவி சஞ்சுவுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்து முடிந்தது.
அதன் பிறகு இவர்களுக்கு தொடர்ந்து மூன்றும் பெண் குழந்தைகளே பிறந்தன. இதனால் சத்யபாலோ ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு ஆத்திரத்திலேயே இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதே போன்று கடந்த 13-ம் தேதியன்று குழந்தைக்காக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சத்யபால் மனைவி மீது கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளார்.
தகவல் அறிந்து சமொஅவ இடத்திற்கு விரைந்த போலீசார் சஞ்சுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, சத்யபாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.