20க்கும் மேற்பட்ட பசுக்கள்; ஓடும் ரயில் மீது தள்ளிவிட்ட விவசாயிகள் - அதிர்ச்சி
20க்கும் மேற்பட்ட பசுக்களை விவசாயிகள் ரயில் மீது தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் புகார்
உத்தரப் பிரதேசம், சம்பல் மாவட்டத்தில் லாராவன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வேளாண் தொழில் செய்யும் மக்கள் தான் அதிகம். இவர்களின் விளை நிலங்களில் உள்ள வேளாண் பயிர்களை அங்குள்ள பசு மாடுகள் மேய்ந்து நாசம் செய்வதாக புகார் தொடர்ந்து எழுந்து வந்துள்ளது.

இதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியாளர்களிடம் விவசாயிகள் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளனர். ஆனால், நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பகுதியில் உள்ள அலிகர்-மொராதாபாத் ரயில் தடத்திற்கு தொந்தரவு செய்யும் 24 பசுக்களை கொண்டு சென்று,
விவசாயிகள் கொடூரம்
ரயில் வரும் நேரம் பார்த்து அதன் மீது பசுக்களை தள்ளிவிட்டுள்ளனர். அப்போது தடத்தில் வந்த டேராடூன் விரைவு ரயில் பசுக்களின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளனது. அதில் 11 பசுக்கள் உயிரிழந்தனர். மற்ற பசுக்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ஒரு மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.