‘’ என் கனவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணர், நானே ராம ராஜ்ஜியம் அமைப்பேன் என்றார்” - அகிலேஷ் யாதவ் பேச்சு வைரல்

2022 akhileshyadav upelection lordkrishna
By Irumporai Jan 04, 2022 05:54 AM GMT
Report

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆகவே  ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் தக்க வைப்பதற்கும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஆட்சியை பிடிப்பதற்கும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகின்றன.

அந்த வகையில் ,உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் -ன் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அகிலேஷ்ய்யதவ் தேர்தல் பிரச்சாரத்தின் போது :

“ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்னுடைய கனவில் தினமும் வருகிறார். அவர் நமது ஆட்சி அமையப் போகிறது. சமூகத்துவத்தின்  பாதையிலே ராமராஜ்யம் நிறுவப்படும்.

சமூகத்துவம் என்று நிறுவப்படுகிறதோ, அப்போது மாநிலத்தில் ராமராஜ்யம் அமைக்ப்படும்”  என பேசினார்.

மேலும், யோகி ஆதித்யநாத் அரசு தோல்வியடைந்த அரசு. பா.ஜ.க.வில் பல மூத்த தலைவர்கள் தங்கள் ரத்தத்தாலும், வியர்வையாலும் பல ஆண்டுகளாக கட்சியை வலுப்படுத்தியிருந்தார்கள்.

கட்சிக்காக வியர்வை சிந்தியவர்கள் தாங்கள்தான் என்று சில சமயங்களில் சொல்கிறார்கள். ஆனால், ஆதித்யநாத் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

பெரிய சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில், கடந்த சில காலமாக யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால், ஏபிபி- சி வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பில் கூட யோகி ஆதித்யநாத் செல்வாக்கு சரிந்திருந்தது  குறிப்பிடத்தக்கது.