இப்படியும் வரதட்சனை கொடுமையா? மனைவியை கற்பழிக்க சொல்லி வேடிக்கை பார்த்த கணவன்!
உத்திரபிரதேசத்தில் வரதட்சனை கொடுக்கவில்லை என்பதற்காக தன் மனைவியை, தம்பி மற்றும் நண்பர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய சொல்லி வேடிக்கை பார்த்த கணவனின் இழி செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண், காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது.
திருமணத்தின் போது அவரது பெற்றோர் ஏராளமான வரதட்சனை கொடுத்தும் போதவில்லை என கணவர் அவ்வபோது கொடுமை செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் கர்ப்பமாக இருக்கும் அவரை கலைக்க சொல்லி அடித்து துன்புறுத்தியுள்ளார். இது போதாதென்று, நண்பர் மற்றும் கூட பிறந்த சகோதரரை வைத்து மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய சொல்லி வேடிக்கை பார்த்துள்ளார்.
கேட்ட வரதட்சனை தரவில்லை என்றால் இப்படித்தான் நடக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை கைது செய்ய சென்றனர்.
ஆனால் அவர்களோ அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.