வாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - மருத்துவமனையிலேயே கற்பழித்த கொடூரம்!!
உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் தங்கியிருந்த காது கேளாத பெண்ணை, மருத்துவமனை ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள மீரட் மருத்துவக்கல்லூரியில் உள்ள துப்புரவு தொழிலாளி ஒருவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
அந்த மருத்துவமனையில் தான் வாய் பேத முடியாத, காது கேளாத பெண் ஒருவர் தங்கியிருந்தார். பெற்றோர்கள் கவனித்து கொள்ள முடியாததால் மருத்துவமனையிலேயே சேர்த்து விட்டு சென்றனர்.
இதனை கண்காணித்து வந்த அந்த ஊழியர், நேரம் பார்த்து காத்து கொண்டிருந்தார் இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை தனியாக இருக்கும் அந்த பெண்ணை கவனித்த அவர், மருத்துவமனையிலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் அந்த பெண்ணை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரை போலீசில் ஒப்படைத்தனர்.