மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்ட இளம்பெண் - காப்பாற்ற சென்றவருக்கு நடந்த கொடூரம்
கொழுந்தனை காப்பாற்ற சென்ற பெண் மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் மீது தாக்குதல்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கிராம மக்களை முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம், கேரி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள 29 வயதான இளம்பெண்ணுடைய கணவரின் சகோதரருக்கும் அந்த பகுதியில் உள்ள சில இளைஞர்களுக்கும் இடையே சில பஞ்சாயத்து இருந்துள்ளது.
வழக்குப்பதிவு
இந்நிலையில் கடந்த புதன்கிழமை(15.01.2025) 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த இளைஞரை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் இளைஞருக்கு வலது கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்த அந்த இளைஞரின் அண்ணி உட்பட கிராம மக்கள் கரும்பு தோட்டத்திற்கு விரைந்துள்ளனர். அந்த கும்பல் இளைஞரின் அண்ணியை தாக்கியதோடு, கிராம மக்கள் முன்னிலையில் அவரது ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தியுள்ளனர். அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற நபரை, அரிவாளால் தாக்கியதில் ஒரு நபர் இடது கையில் ஒரு விரலை இழந்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைறைவாக உள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.