சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை - அம்பலமான அதிர்ச்சி காரணம்!

Uttar Pradesh Marriage
By Sumathi Mar 18, 2024 12:48 PM GMT
Report

அரசு நிதி பெறுவதற்காக இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

விவாஹ யோஜனா

உத்தரப்பிரதேசத்தில் விவாஹ யோஜனா (Mukhya mantri Samuhik Vivaah Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு திருமணம் நடத்தி நலத்திட்ட உதவிகளை அம்மாநில அரசு வழங்கி வருகிறது.

சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை - அம்பலமான அதிர்ச்சி காரணம்! | Up Brother And Sister Marriage For Govt Funds

மேலும், தம்பதிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களும், ரூ.35,000 வழங்கப்படுகிறது. இந்த நிதியைப் பெறுவதற்காக இடைத்தரகர்கள், திருமணமானவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏற்கெனவே திருமண அண்ணனுக்கு அவரது தங்கையைத் திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது. லட்சுமிபூர் தொகுதியில் முதல்வரின் திருமணத் திட்டத்தின் கீழ் 38 ஜோடிகள் மார்ச் 5-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தில் இறந்த அக்கா - அடம்பிடித்து உடனே தங்கையை மணமுடித்த மாப்பிள்ளை

திருமணத்தில் இறந்த அக்கா - அடம்பிடித்து உடனே தங்கையை மணமுடித்த மாப்பிள்ளை

திருமண மோசடி

இந்த திருமணத்தின் திருமணமான தம்பதிக்கு வீட்டு உபயோகப்பொருட்களும், 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதில் திருமண நாளில், ஒரு மணமகன் மண்டபத்திற்கு வரவில்லை. இதனால், மணமகனுக்குப் பதில் அவரது சகோதரனுக்கு திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.

சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை - அம்பலமான அதிர்ச்சி காரணம்! | Up Brother And Sister Marriage For Govt Funds

அதன்படி ஏற்கெனவே திருமணமான அண்ணனுக்கும், அவரது சகோதரிக்கு திருமணத்தை அனைத்து முறைப்படி சடங்குகளுடன் நடத்தியுள்ளனர். இதையறிந்த மகராஜ்கஞ்ச் பகுதி வளர்ச்சி அலுவலர் (BDO), அரசு சார்பில், அந்த தம்பதியருக்கு வழங்கிய பொருட்களைப் பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து, விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட நீதிபதி அனுனய் ஜா தெரிவித்துள்ளார்.