9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி

Narendra Modi Uttar Pradesh Prime Minister of India starts 9 medical colleges
By Anupriyamkumaresan Oct 25, 2021 11:15 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

உத்தரபிரதேசத்தில், ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இவ்விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி | Up 9 Medical Colleges Opened By Pm Narendra Modi

சித்தார்த் நகர், எடாஹ், ஹர்டோய், பிரதாப்கர், பதேபூர், டியோரியா, காசிப்பூர், மிர்சாபூர், ஜாவ்ன்பூர் ஆகிய 9 இடங்களில் இந்த மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.