வன்கொடுமை: 4 வயது சிறுமியை கொன்ற மாமா
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
உடனடியாக பொலிசார் வந்து பரிசோதனை செய்ததில் காரிலிருந்து 4 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, போலிசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோதனையின் முடிவில் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது, இதனை தொடர்ந்து போலிசார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் மாமா ஜமீல் என்கிற சோட்டு குற்றவாளி என தெரியவந்தது.
வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன் சிறுமியின் சடலத்தை மறைத்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அவரை கைது செய்யக்கோரி உறவினர்கள், கிராமத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், தலைமறைவான ஜமீலை போலிசார் தேடி வருகின்றனர்.
