ஆசிட் ஊற்றி எரித்து, முகத்தை சிதைத்து 12 வயது சிறுவன் கொடூர கொலை!!
உத்தரபிரதேசத்தில் 12 வயது சிறுவனை ஆசிட் ஊற்றி கோரமாக கொலை செய்த வழக்கில், சிறுவனின் உறவினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு பணக்கார தம்பதிகள் தங்கள் 12 வயது மகனோடு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுவனின் தந்தைக்கு அவரின் உறவினர்களில் சில எதிரிகள் இருந்தனர்.
அதனால் தந்தையை பழி வாங்க 12 வயது சிறுவனை கொலை செய்ய பலரும் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 வயது சிறுவன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது அந்த கூட்டம் சிறுவனை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்துள்ளது. மேலும் சிறுவனின் முகத்தை ஆசிட் ஊற்றி சிதைத்துள்ளனர்.
ஆத்திரமடங்காத அவர்கள், மேலும் சிறுவனின் உடலை செங்கல் கொண்டு கொடூரமாக தாக்கி வயல் வெளியில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.
சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிறுவனை தேடி வந்தனர். அப்போது வயல் வெளியில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுவனின் உறவினர் என உறுதி செய்யப்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.