உடலில் உள்ள தேவையற்ற முடி - எடுக்க இதோ சிம்பிள் டிப்ஸ்
உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க இயற்கையான வழி இதோ..
தேவையற்ற முடி
சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படலாம். அதிக வளர்ச்சி இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

ஆனால் லேசான முடி வளர்ச்சிக்கு ரசாயன க்ரீம்களுக்கு பதிலாக இயற்கையான தீர்வுகளை பயன்படுத்தலாம். வீட்டிலேயே எளிய ஹேர் ரிமூவல் பேக் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1 தேக்கரண்டி கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், அரிசி மாவு மற்றும் தேவையான அளவு பால் அல்லது தயிர் கலந்து பேஸ்ட் போன்று தயார் செய்ய வேண்டும். பின், முடிகள் உள்ள இடத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதனை தொடர்ந்து வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் செய்து வர, தேவையற்ற முடிகள் படிப்படியாக உதிரும். குறிப்பாக, இதற்கு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.