இளைஞர்களே கொஞ்சம் பொறுப்பா இருந்திடுங்கள் : டிஜிபி சைலேந்திர பாபு
சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
அஜித் ரசிகர் உயிரிழப்பு
நேற்று விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியானது. வெகுநாட்களுக்கு பிறகு இருவரது திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானது ரசிகர்களை குஷிபடுத்தியது.
சைலேந்திர பாபு அறிவுரை
அதே சமயம் ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை கண்டுகளித்த நிலையில், பரத்குமார் என்ற அஜித் ரசிகர் ஓடும் லாரியில் ஏறி ஆடியதால் கீழே விழுந்து உயிரிழந்தார்
. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திர பாபு, சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுப்பட வேண்டாம்.
இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ளார்.