தமிழக ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு - நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்

southernrailway unreservedcoaches
By Petchi Avudaiappan Oct 25, 2021 08:13 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக  கடந்தாண்டு முதல் தற்போது வரை முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஊரடங்கு தளர்வுகளில் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்ற தெற்கு ரயில்வே சார்பில் முதற்கட்டமாக 23 ரயில்களில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம் - திருச்சி, திருச்சி - ராமேஸ்வரம், சென்னை - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - சென்னை, பாலக்காடு டவுன் - திருச்சி, திருச்சி - பாலக்காடு டவுன், கண்ணூர் - கோவை, கோவை - கண்ணூர், நாகர்கோவில் - கோட்டயம், கோட்டயம் - நாகர்கோவில், கோவை - மங்களூர், மங்களூர் - கோவை, நாகர்கோவில் - கோவை, கோவை - நாகர்கோவில், திருச்சி - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - திருச்சி ஆகிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படவுள்ளது. 

இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.