கனடாவில் வெப்பத்தால் அதிகரிக்கும் உயிர்பலி.. உலகத்தின் பருவநிலைமாறுகின்றதா ?

canada unprecedented 486death
By Irumporai Jul 01, 2021 02:00 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஒரு பக்கம் கொரோனா நம்மை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் உருமாற்றம் அதனால் ஏற்படும் பாதிப்பு உலகின் வல்லரசு நாடுகளையே ஆட்டம் காண வைத்தது.

இந்த நிலையில் உலகையே அச்சுறுத்த சத்தம் இல்லாமல் ஒரு நிகழ்வு அரங்கேறி வருகிறது அதுதான் பருவநிலை மாற்றம். பருவ நிலை மாற்றம் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த நிலையில்,உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை மற்றும் பனிக்காற்றுக்கு அங்கு பஞ்சமே இருக்காது.

இன்னும் சொல்லப் போனால் செழிப்பான தம்பதிகளின் ஹனிமூன் ஸ்பாட்டேகன நடாதான்

இந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது.

கடும் வெப்பத்தின் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் உள்ள வடமேற்குப் பிராந்தியங்களில் தற்போது அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர்.

கனடாவில் தற்போதைய நிலவரப்படி 121டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கடும் வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக கொலம்பியாவின் சில பகுதிகளில்கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

வெப்பத்தினை குறைக்க சாலையோரத்தில் செயறகை நீரூற்றுகள் அமைத்து குளிரை கொடுக்க முயல்கின்றது கனட அரசு ஆனால் இயற்கையினை கடந்து செயற்கையாக கொடுக்க முடியுமா?

கனடா மட்டும் அல்ல அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன .

நேற்று ஒரே நாளில் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 200 பேர் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாற்றம் குறித்து கனடா வானிலை மையத்தின் மூத்த ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் கூறுகையில்உலக அளவில் மிகவும் குளுமையான மற்றும் பனி அதிகம் பொழியும் இரண்டாவது நாடு கனடா.

ஆனால், இப்படியொரு வெப்பநிலை பதிவான இதுவரை பாதிகவில்லை என கூறியுள்ளார்.

ஆய்வுகளின் படி 1940 களுக்கு பிறகு அமெரிக்காவின் போர்ட்லாந்தில் 46.1 செல்சியஸ் டிகிரியும் சியாட்டிலில் 42.2 செல்சியஸ் டிகிரியும் வெப்பம் பதிவானதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது.

இவையெல்லாம் என்ன உலகம் அழிகின்றது உலகத்தின் இறுதி முடிவு என நாம் விவாதம் வைத்து பேசினாலும் . கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் காரணம் நாம்தான் .

ஆம், உலகின் நுரையீரலாக இருந்த அமேசான் காடுகளை அழித்தது நீர் நில வளங்களை உறிஞ்சியது பனிப்பாறைகளை உருகவைத்தது என அனைத்திற்கு பிள்ளையார்சுழி போட்டு தொடங்கி வைத்தது நாம் தான்.


  பருவநிலை தொடர்பாக உலக நாடுகள் கலந்துகொண்ட  கூட்டத்தில் இளைய சமுதயாமான எங்களுக்கு நீங்கள் சேர்த்து வைத்தது இது தானா? நீங்கள் செய்த காரியத்தால் என்ன நடந்துள்ளது எல்லாவர்றுக்கும் காரணம் நீங்களே

கனடாவில் வெப்பத்தால் அதிகரிக்கும் உயிர்பலி..  உலகத்தின்   பருவநிலைமாறுகின்றதா ? | Unprecedented Temperature Canada 486 Deaths

என சூழலியல் போராட்டக்காரர் ஹிரிட்டா தன் பெர்க்  கூட்டத்தில்முழங்கிய போது அங்கிருந்த உலகத்தலைவர்களால் மெளனத்தையே பதிலாக கொடுக்க முடிந்தது.

கனடா மட்டும் அல்ல காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமி சந்திக்கப் போகும் விளைவுகள் குறித்து நாளும் புதிய செய்திகள் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய மனிதர்களாகிய நாம் என்ன செய்துள்ளோம் என்பதுதான் நம் முன்னால் உள்ள மில்லியன் டாலர் கேள்வி?