மனைவியின் சம்மதமின்றி 'இயற்கைக்கு மாறான உடலுறவு' குற்றமில்லை - உயர்நீதிமன்றம்
இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கு மாறான உடலுறவு
மனைவியின் அனுமதியின்றி, கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 2017ல் மனைவி உயிரிழந்தார்.
தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த பெண்ணுக்கு பெரிட்டோனிடிஸ் மற்றும் மலக்குடலில் துளை இருந்ததாக மருத்துவர் கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ”மனைவி 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், கணவரால் செய்யப்படும் எந்தவொரு பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயலையும் எந்த சூழ்நிலையிலும் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது. பிரிவு 375, 376 மற்றும் 377 IPC ஐப் பார்க்கும்போது, பிரிவு 375 IPC இன் திருத்தப்பட்ட வரையறையின் அடிப்படையில்,
கணவன்-மனைவி இடையேயான பிரிவு 377 இன் கீழ் குற்றத்திற்கு இடமில்லை. அத்தகைய பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க முடியாது.” எனத் தீர்ப்பளித்துள்ளது.