என் இதயத்துடிப்பே நின்றுவிட்டது: 28 வயதில் ஓய்வை அறிவித்த இளம் கிரிக்கெட் வீரர் உருக்கம்

unmuk chand
By Fathima Aug 14, 2021 05:36 AM GMT
Report

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியில் கேப்டனாக இருந்த உன்முக் சந்த் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி கோப்பையை வென்று கொடுத்தவர் உன்முக் சந்த்.

அனைத்து ஊடகங்களும் அடுத்த விராட் கோஹ்லி என உன்முக் சந்தை பாராட்டி தள்ளின, எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் உன்முக் சந்தின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள உன்முக் சந்த், அமெரிக்காவில் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில், என் தாய்நாட்டுக்காக விளையாட முடியாது என நினைக்கும்போது என் இதயத்துடிப்பே நின்றுவிட்டது.

இந்தியாவில் நான் விளையாடியபோது மறக்க முடியாத நினைவுகள் இருக்கின்றன, உலகக் கோப்பையை வென்றது என் வாழ்வில் சிறந்த தருணம் என தெரிவித்துள்ளார்.